"ஜெயலலிதாவோடு தன்னை ஒப்பிட்டு அண்ணாமலை பேசியது தவறில்லை" - வானதி சீனிவாசன்
ஜெயலலிதாவோடு அண்ணாமலை தன்னை ஒப்பிட்டதில் தவறு இல்லை என்றும், தனது ஆளுமைத் திறமை குறித்து தெரிவிக்கவே அவர் அவ்வாறு பேசினார் என்றும், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.
மகளிர் தினத்தை ஒட்டி, கோவையில் ஆயிரம் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் மற்றும் பயிற்சி வழங்கும் விழாவில் பங்கேற்ற வானதி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
தற்போது உணர்வு பூர்வமாக நிலைமை சரியில்லை என்றாலும், அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடனான தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
Comments